வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளதா? என்பது குறித்தும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவலச்சுழி ஊராட்சியில் தஞ்சை- கும்பகோணம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். இதேபோல் மேலகொற்கை ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரேஷன் கடையில்...

மேலகொற்கை ஊராட்சியில் பொது வினியோகத்திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

கொற்கை ஊராட்சி புதுச்சேரியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தார்.


Related Tags :
Next Story