வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.12.96 கோடி மதிப்பீட்டில் 242 பணிகள் நடைபெற்று வருகின்றது. கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் 25 பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரங்கம்பட்டி ஊராட்சி கிராமத்தில் வையாழிமடை கிராமத்தில் ரூ.6.36 லட்சம் மதிப்பீட்டில் குளம் உட்புறம் பகுதிகளில் தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், தரங்கம்பட்டி செல்வநகர் பகுதியில் ரூ.2.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற சிமெண்டு சாலை பணிகளையும், மாவத்தூர் ஊராட்சி பகுதியில் கழுத்தரிக்காபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிப்பறை கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் வீரணம்பட்டி பகுதியில் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பாரதப்பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகளையும், அதே பகுதிகளில் ரூ.4.12 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளக்குளம் வாரியில் மழைநீர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.