வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

அப்போது வரகூர் ஊராட்சியில் கருங்காலி குப்பம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 765 மீட்டர் பிளாஸ்டிக் சாலை பணிகள், அல்லாலச்சேரி ஊராட்சியில் அமைக்கப்படவுள்ள 341 மீட்டர் கால்வாய், சிமெண்டு ரோடு மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிகள், காவனூர் ஊராட்சி வாரதேசி மலை குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், காவனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணை குட்டை பணிகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் சஞ்சீவராயன்பேட்டை அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு செய்தார். பாத்திகாரன்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று வரும் பிறப்பு முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குறித்த சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் தாது நிறைந்த உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story