வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

கீழ்வேளூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். கீழ்வேளூர் ஒன்றியம் ஏரவாஞ்சேரி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி, பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும்பணி, ஆந்தக்குடி, வெண்மணி ஊராட்சிகளில் ரூ.11.62 லட்சம் மதிப்பிட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். சிகார் ஊராட்சியில் ரூ14.59 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மற்றும் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணிகளையும், கொடியாலத்தூர் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் நேரடிநெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தஆய்வின்போது ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பாலசந்திரன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story