காய்ச்சல் தடுப்பு முகாமை கலெக்டர் ஆய்வு


காய்ச்சல் தடுப்பு முகாமை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூரில் காய்ச்சல் தடுப்பு முகாமை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் கீழப்பாவூரில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, துணைத்தலைவர் ராஜசேகர், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு இலங்கை தமிழர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் 5 ஆயிரம் மெட்ரிக் டன் சேமிப்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தையும் பார்வையிட்டார். பின்னர் மழைச்சாரல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள், பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு சந்தையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருந்து பொருட்கள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சீ.காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story