வேர்க்கடலை அறுவடை எந்திரத்தை கலெக்டர் ஆய்வு


வேர்க்கடலை அறுவடை எந்திரத்தை கலெக்டர் ஆய்வு
x

ஊசூரில் வேர்க்கடலை அறுவடை எந்திரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் பிரதான பயிர்களில் நிலக்கடலை ஒன்றாகும். நிலக்கடலை அறுவடை பணிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் வேளாண்மைத் துறை மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் எந்திரங்கள் மற்றும் மதிப்புக்கூட்டு எந்திரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது வேளாண்மை துறை சார்பில் கடலை செடியில் இருந்து வேர்க்கடலையை பிரித்தெடுக்கும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இதற்கான செயல் விளக்க நிகழ்ச்சி ஊசூரில் நடந்தது. அப்போது அறுவடை எந்திரத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, நிலக்கடலை அறுவடை இயந்திரத்தின் பணிகளை பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து ஊசூர் -அத்தியூர் சாலையில் மழை நீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது.

தண்ணீர் தேங்கும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர், அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வேளாண்மை இயக்குனர் ஸ்டீபன்ஜெயகுமார், அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயகுமாரிகண்ணன், மாலதிசுரேஷ்பாபு, தேவிசுரேஷ், கவிதாசிவகுமார், அண்ணாமலை, ஊராட்சி செயலாளர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story