திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


திட்டப்பணிகளை கலெக்டர்  ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி வட்டார பகுதியில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி வட்டார பகுதியில் தி்ட்டப்பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிவகிரி வட்டாரப் பகுதியில் விஸ்வநாதப்பேரி, தேசியம்பட்டி என்ற நாரணபுரம், அருளாட்சி என்ற திருமலாபுரம், வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பவுண்டு தொழு, களம் புறம்போக்கு, அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

மேலும் வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் ஆகியவற்றையும் பார்வையிட்டு அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து விஸ்வநாதப்பேரியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், பஞ்சாயத்து அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், ரேசன் கடை, சுகாதார வளாகம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர் பாலகணேஷ், யூனியன் ஆணையாளர்கள் கருப்பசாமி, ஜெயராமன், குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, யூனியன் பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமசாமி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளிமயில், விஸ்வநாதப்பேரி பஞ்சாயத்து தலைவர் ஜோதி மணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, மக்கள் நல பணியாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story