ஓடை தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு


ஓடை தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
x

சின்னசேலம் அருகே ஓடை தூர்வாரும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே அம்மையகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ,15 லட்சம் மதிப்பில் நெல்லையன் ஓடையை தூர்வாரி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா என அங்கிருந்த அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் நெல்லையன் ஓடையில் 3 சிறிய தடுப்பணைகள் புதியதாக கட்டப்படவுள்ளது. இந்த தடுப்பணைக்கு தண்ணீர் வருவதற்கும், வரத்து வாய்க்கால் இல்லாத பகுதிகளில் புதியதாக வரத்து வாய்க்கால் அமைப்பது தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், சின்னசேலம் ஒன்றியக்குழுதலைவர் மா.சத்தியமூர்த்தி, தாசில்தார் அனந்தசயனன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, ஒன்றிய பொறியாளர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் நில அளவையர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story