இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆம்பூர்
இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்காக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் மின்னூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சின்னப்பள்ளிகுப்பம் கிராம இலங்கை தமிழர்களுக்காக ரூ.8 கோடியில் மதிப்பீட்டில் 160 வீடுகள் கட்டும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
வீடுகளின் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கலீல், தாசில்தார் மகாலட்சுமி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.