அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு


அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
x

இரையுமன்துறையில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணியை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

இரையுமன்துறையில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணியை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

அலை தடுப்பு சுவர்

குமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அலைதடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு உட்பட்ட இரையுமன்துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டர் நீளமுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் அள்ளும் பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பயனீட்டாளர்களால் உடனடியாக தங்கு தடையின்றி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவர் பணியினை மேற்கொள்ளவும், மணல் அள்ளும் பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள எந்திரத்தினை மாற்றி உடனடியாக ராட்சத மணல் அள்ளும் எந்திரத்தை வைத்து பணி மேற்கொள்ளவும் மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் காசிநாதபாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story