கலைக்கல்லூரி, மருத்துவமனை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
காட்பாடி தொகுதியில் சேர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்பாடி தொகுதியில் சேர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நரிக்குறவர் காலனி
காட்பாடி ஊராட்சி ஒன்றியம் கரிகிரி ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 42 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். காலனியில் கட்டப்படும் பசுமை வீடு கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அரசு கலைக்கல்லூரி
சேர்க்காட்டில் ரூ 12.46 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக, விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.