எருதுவிடும் விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு


எருதுவிடும் விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
x

கிரிசமுத்திரம் பகுதியில் எருதுவிடும் விழா ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) எருது விடும் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் பகுதியில் முன்னேற்பாடு பணிகள்குறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் கால்நடை துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

அப்போது விழாக் குழுவினரிடம் அரசின் உரிய வழிகாட்டுதல் படி எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் உரிய நேரத்தில் எருதுவிடும் விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தாசில்தார் சம்பத், துணை தாசில்தார் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story