தேவர் குருபூஜை விழா ஏற்பாடுகள் கலெக்டர் நேரில் ஆய்வு


தேவர் குருபூஜை விழா ஏற்பாடுகள் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

தேவர் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவாலயம் உள்ளது. இங்கு வருகிற 28,29,30-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குருபூஜை விழா நடக்கிறது. தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா 28-ந்தேதி காலை 6 மணிக்கு விசேஷ பூஜையுடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து முதல்நாள் ஆன்மிக விழாவும், 29-ந்தேி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடக்கிறது.

இதையொட்டி 30-ந்தேதி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதால் அதன் ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று பசும்பொன் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். விழா ஏற்பாடுகள் குறித்தும் அரசியல் தலைவர்கள் வரும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது துணை சூப்பிரண்டு மணிகண்டன், மாவட்ட வடக்கு ஒன்றிய கவுன்சிலர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், வட்டாட்சியர் சிக்கந்தர்பபிதா, கமுதி யூனியன் ஆணையாளர்கள் ராஜகோபால், மணிமேகலை, கமுதி பேரூராட்சி அலுவலர் இளவரசி, பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story