இல்லம் தேடிக்கல்வி மையத்தை கலெக்டர் ஆய்வு


இல்லம் தேடிக்கல்வி மையத்தை கலெக்டர் ஆய்வு
x

இல்லம் தேடிக்கல்வி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

இல்லம் தேடிக்கல்வி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் அருகே ஜோதிமங்கலத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள தொடக்க நிலை இல்லம் தேடிக்கல்வி மையத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் தன்னார்வலரிடம் ஊக்கத்தொகை வருகிறதா?, மையம் செயல்படுவதை பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் அடிப்படை கணக்குகள் ஆகியவற்றை கலெக்டர் சோதித்தார்.

ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயவேல், இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவள்ளி, வட்டார கல்வி அலுவலர் கமலநாதன், தலைமை ஆசிரியர் சிவசங்கரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story