வீடு கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு


வீடு கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x

கொள்ளிடம் பகுதியில் வீடு கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆலாலசுந்தரம், பண்ணங்குடி, ஆணைக்காரன்சத்திரம், கூத்தியம்பேட்டை, கடைக்கண்விநாயக நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு திட்டத்தில் புதிதாக வீடு கட்டும் பணிகள், பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர், பொறியாளர்கள் பலராமன், பூர்ணச்சந்திரன், தாரா ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story