ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
நெல்வாயில் ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெல்வாய் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் ஏரி நிரம்பிய சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றிபோகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் எக்ஸோனாரா இன்டர்னேஷனல் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து அனுமதி பெற்று ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, தாசில்தார் செந்தில், நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சங்கர், துணைத்தலைவர் திவ்யாஆறுமுகம், எக்ஸ்னோரா வேலூர் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜன், ஊராட்சி செயலாளர் சரத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.