ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
கனிகனியான் கிராமத்தில் ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கனிகனியான் கிராமத்தில் உள்ள ஏரியை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்து 419 மதிப்பில் தூர்வாரி, கரையை பலப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற் கட்டமாக ஏரி தூர்வாரும் பணி பொக்லைன் மூலமாக நடந்துவருகிறது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, வருவாய் ஆய்வாளர் சந்தியா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story