ஆற்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை கலெக்டர் ஆய்வு


ஆற்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை கலெக்டர் ஆய்வு
x

ஆற்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காட்டில் புதியதாக கட்டப்படும் சமையல் கூடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் காலை உணவு திட்டத்துக்கான சமையல் கூடம் கட்டப்பட்டு முடிவு பெறும் நிலையில் உள்ளது.

இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி பொறியாளர் கணேசன் நகரமன்ற உறுப்பினர் குணா உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story