பிச்சாவரம் சுற்றுலா மையத்தை கலெக்டர் ஆய்வு


பிச்சாவரம் சுற்றுலா மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து சுற்றுலாத்துறை மந்திரி வருகையையொட்டி பிச்சாரம் சுற்றுலா மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

பரங்கிப்பேட்டை:

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரத்தில் உலக புகழ்வாய்ந்த மாங்குரோவ் காடுகள் உள்ளன. இதன் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இ்ந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரேசாகபே நாளை(சனிக்கிழமை) பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு வர உள்ளார். பின்னர் அவர் அங்கு நடைபெற உள்ள காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு பணியை தொடங்கி வைக்கிறார். இதற்கான முன் ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து நேற்று காலை பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வந்தார். பின்னர் அங்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்த அவர் பிச்சாவாரம் சுற்றுலா மையத்தையும், பேரூராட்சி பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அவர் சுகாதார நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும், பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அப்போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி துணை தலைவருமான கிள்ளை ரவீந்திரன், சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதாசுமன், சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இங்கிலாந்து அரசனுடைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வருகையால் பாதுகாப்பு பணி செம்மையாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டார்.


Next Story