திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் ரூ.4¾ கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் ரூ.4¾ கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிமெண்டு சாலை

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜம்மனப்புதூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான பணியும், 75 மீட்டர் நீளத்திற்கு சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் நடக்கிறது.

அதேபோல், கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆதியூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 13 வீடுகள் கட்டப்படுகிறது. உடையாமுத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.8.43 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும்பணி, சமத்துவபுரத்தில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டம் பராமரிப்பு பணி, ரூ.1.2 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா பராமரிப்பு பணி, சிம்மனபுதூர் ஊராட்சியில் ரூ.4 கோடியே 30 லட்சத்தில் 9.3 கி.மீ தொலைவிற்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. மொத்தம் ரூ.4 கோடி 80 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விசமங்களம் ஊராட்சி பாம்பாற்றின் குறுக்கே நபார்டு பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

அறிவுறுத்தல்

அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறித்தினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி திட்ட அலுவலர் ஆப்தாபேகம், உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, பிரபாவதி, மணவாளன், சங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story