ஓடுகள் விழுந்து மாணவர்கள் காயமடைந்த பள்ளி கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு


ஓடுகள் விழுந்து மாணவர்கள் காயமடைந்த பள்ளி கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு
x

ஓடுகள் விழுந்து மாணவர்கள் காயமடைந்த பள்ளி கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் எஸ்.ஆர்.என். பழங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ரதிமுத்து இந்திரஜித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட 77 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சடைமேரி கிராமத்தில் ஓடு சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர். அந்த பள்ளி கட்டிடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், வட்டாட்சியர்கள் சிவகுமார், ஜெயக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவி, அன்பு கண்ணன், கவுன்சிலர் சசிகலா, வருவாய் ஆய்வாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story