வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் அருகில் கலைஞர் நகரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமுதாய கழிப்பிடம் மறுசீரமைத்தல் பணியினை ஆய்வு செய்த அவர் வருகிற 20-ந் தேதிக்குள் பணியினை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

திருப்பாற்கடல் மயானத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டும்பணியினை பார்வையிட்ட அவர் பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூறினார்.

மேலும் தகன மேடை அருகில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள்.

தொடர்ந்து, காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு மையத்தினை ஆய்வு செய்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணி போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் உடனிருந்தார்.


Next Story