வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ஆய்வு


வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ஆய்வு
x

ஏனங்குடியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி, ஆதலையூர் ஆகிய பகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஏனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்தினையும், ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்தினையும் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்ே்பாது வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story