குழந்தைகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்


குழந்தைகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்
x

காரியாபட்டி ஒன்றியத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி ஒன்றியத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினையும், பிசிண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊருணி வரத்து கால்வாய் தடுப்பையும் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தண்ணீர் வரத்து, தண்ணீர் தேக்கி வைக்கும் அளவு, அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

குழந்தைகளுடன் கலந்துரையாடல்

பிசிண்டி, மாந்தோப்பு, அழகியநல்லூர் கெப்பிலிங்கம்பட்டி ஆகிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள், பள்ளி வளாகத்தின் தூய்மை, பள்ளிகளுக்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, காலை சிற்றுண்டி செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ததுடன், குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.ஆய்வின்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லீலா, காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சண்முகப்பிரியா, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


Next Story