மாற்றுத்திறனாளிக்கு 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையை வழங்கிய கலெக்டர்
கோரிக்கை மனு கொடுத்த இடத்திலேயே மாற்றுத்திறனாளிக்கு 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையை வழங்கிய கலெக்டர் மகாபாரதியை பொதுமக்கள் பாராட்டினர்.
கொள்ளிடம்:
கோரிக்கை மனு கொடுத்த இடத்திலேயே மாற்றுத்திறனாளிக்கு 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையை வழங்கிய கலெக்டர் மகாபாரதியை பொதுமக்கள் பாராட்டினர்.
ஆலோசனை கூட்டம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வீடு கட்டும் பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.
அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்
அதனைத் தொடர்ந்து ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி கீழ வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜீவ்காந்தி என்பவர் 100 வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த இடத்திலேயே 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையை மாற்றுத்திறனாளி ராஜீவ்காந்திக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்்ச்சி அலுவலர் ரெஜினாராணி மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பாராட்டு
கோரிக்கை மனு கொடுத்த இடத்திலேயே மாற்றுத்திறனாளிக்கு 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை வழங்கிய கலெக்டர் மகாபாரதியை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.