கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு


கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு
x

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்கள் அவர்களுக்கு சரியான முறையில் சென்று சேர்கிறதா என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை தாசில்தார்கள் ஜெயந்தி, சாதிக், மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story