கத்தரிமலையில் ரூ.2 லட்சம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் மாவு அரவை எந்திரம்


கத்தரிமலையில் ரூ.2 லட்சம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் மாவு அரவை எந்திரம்
x

கத்தரிமலையில் ரூ.2 லட்சம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் மாவு அரவை எந்திரம் அமைக்கப்பட உள்ளது.

ஈரோடு

ஈரோடு

கத்தரிமலையில் ரூ.2 லட்சம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் மாவு அரவை எந்திரம் அமைக்கப்பட உள்ளது.

மாவு அரவை எந்திரம்

அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட கத்தரிமலையில் 75 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்காக சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை எந்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மாவு அரவை எந்திரம் அமைப்பதற்காக கனரா வங்கியின் சார்பில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆஸ்கர் நிறுவனத்தினரிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்வாதாரம்

கத்தரிமலை கிராமத்தில் மானாவாரியாக ராகு, கம்பு, கேழ்வரகு பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதை அந்த மக்கள் உணவாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 75 கிலோ சிறுதானிய மாவு தேவைப்படுகிறது. அவர்கள் விளைவித்த பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி செல்கிறார்கள். அவர்கள் 8 கிலோ மீட்டர் அடர்வனத்தின் வழியாக ஆபத்தான முறையில் நடந்து சென்று வந்தார்கள்.

கேழ்வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை மதிப்பு கூட்ட தெரிந்தால் அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். எனவே அவர்களுக்காக ஆஸ்கர் நிறுவனத்தின் சார்பில் ஒரு புதிய முறையில் சூரியஒளியில் செயல்படும் ஒரு அரவை எந்திரத்தை வடிவமைத்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சூரியஒளியில் இயங்கும் மாவு அரைக்கும் எந்திரத்தை கனரா வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் மூலம் ஈரோடு மாவட்ட கனரா வங்கி அலுவலகம் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மருத்துவ ஆலோசனை

கத்தரிமலையில் மின்சாரமோ, வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதிகளோ கிடையாது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்துயிர் திட்டம் மூலமாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், உண்டு உறைவிட பள்ளிக்கூடத்துக்கு இணையதளம் வழியாக கல்வி மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story