உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
x

அம்பையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி

அம்பையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

பற்கள் பிடுங்கிய விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமித்து உள்ளார்.

இதற்கிடையே சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங்கிடம் தொலைபேசியில், பற்களை பிடுங்கியது தொடர்பாக விளக்கம் கேட்ட உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story