தரப்பரிசோதனை மேற்கொள்வதற்கான உணவு பகுப்பாய்வுக்கூட வாகனம் கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்


தரப்பரிசோதனை மேற்கொள்வதற்கான உணவு பகுப்பாய்வுக்கூட வாகனம் கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உணவு தரப்பரிசோதனை மேற்கொள்வதற்கான உணவு பகுப்பாய்வுக்கூட வாகனத்தை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு தரப்பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூட வாகனத்தை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் சுகாதாரத்துடனும், நலமுடனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், பொதுமக்கள் உணவுகளின் தரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா, கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களின் தரம் குறித்து கண்டறியவும் உணவு பகுப்பாய்வுக்கூட வாகன திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு பணிகள்

அதனடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உணவுப்பொருட்களின் தன்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் உணவு பகுப்பாய்வுக்கூட வாகனம் தற்போது கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் இம்மாதம் முழுவதும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே உணவுப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் உணவுப்பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளுக்கு இவ்வாகனம் வருகைபுரியும் சமயத்தில் உணவுப்பொருட்களில் தங்களுக்குரிய சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story