பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் நேரில் ஆய்வு


பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர்  நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி சுற்றுசுவர் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த வீ.கூட்டுரோட்டில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி பயிற்சி மையம் கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை சுற்றி தற்போது சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட ராயப்பனூர், செல்லியம்பாளையம் கிராம மக்கள் அங்குள்ள தார் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் காளசமுத்திரம், குரால், பாக்கம்பாடி ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மற்றொரு தார் சாலையையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி பயிற்சி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தாங்கள் தற்போது பயன்படுத்தி வரும் சாலையை விரிவாக்கம் செய்து நிரந்தரமாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படால் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாக கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று வீ.கூட்டுரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் இந்திரா, சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, மண்டல துணை தாசில்தார் மனோஜ், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்சாமிநாதன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story