நினைவு நாளையொட்டி ஜீவா மணி மண்டபத்தில் கலெக்டர், அரசியல் கட்சியினர் அஞ்சலி


நினைவு நாளையொட்டி ஜீவா மணி மண்டபத்தில் கலெக்டர், அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜீவா நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஜீவா நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ஜீவா நினைவு நாள்

பொதுவுடமை வீரர் ஜீவாவின் 60-வது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நினைவு மண்டபத்தில் உள்ள ஜீவா உருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், மாநகராட்சி கவுன்சிலர் ஜவஹர் மற்றும் காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

இதேபோல் குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிர்வாகி மோகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Next Story