கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

ஆம்பூரில் உள்ள கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் நகராட்சி நேதாஜி ரோடு, உமர் ரோடு, பஜார் வீதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடைகளில் இருந்து 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின் போது ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, தாசில்தார் மகாலட்சுமி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story