வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

விருத்தாசலம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஒன்றியம் விஜயமாநகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை மற்றும் நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த தொழிலாளர்களிடம் அனைவருக்கும் ஊதியம் சரியாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். மேலும் தொழிலாளர்களின் வருகை பதிவேடுகளை வாங்கி சரிபார்த்தார்.தொடர்ந்து பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், எருமனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தீவன புல் சாகுபடி மற்றும் அருந்ததியர் காலனி, எருமனூர் காலனி, எருமனூர் வடகுப்பம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த சாலை பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டம்

அதனை தொடர்ந்து விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டம் தொடர்பாக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்காக நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கட்டுப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

இதில் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர், செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன், ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் செந்தில், தேன்மொழி, விருத்தாசலம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் விஜயகுமார், ஆரோக்கிய விமலா மேரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் எருமனூர் சவுமியா வீரமணி, வீரம்மாள் பழனிசாமி மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story