பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் ஆய்வு


பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நீலகிரி

ஊட்டி,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1.12.2022-ல் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் ரூ.1,000 ரொக்க பணம் வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து சர்க்கரை, பச்சரிசி ஆகியவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்து, லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா தாலுகாவில் 33 ரேஷன் கடைகள், குன்னூரில் 83, ஊட்டியில் 112, கூடலூரில் 63, பந்தலூரில் 48, கோத்தகிரியில் 64 என 403 ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முத்தோரை பகுதியில் கூட்டுறவு அமுதம் சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் மற்றும் கரும்புகளை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story