எட்டயபுரம் பேரூராட்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு


எட்டயபுரம் பேரூராட்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் பேரூராட்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் தேர்வு நிலைப் பேரூராட்சி அலுவலகத்தில் பொது நிதி 2022-23-ன்கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மன்றக் கூட்டரங்கம் மற்றும் அலுவலகக் கட்டட பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைவில் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமி சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story