நல்லம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு


நல்லம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
x

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி

வளர்ச்சி திட்டப்பணிகள்

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொம்மசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.24 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தனிநபர் உறிஞ்சி குழிகள், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தனிநபர் குடிநீர் இணைப்புகள் ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் இண்டூர் ஊராட்சியில் இருந்து நாகர்கூடல் ஊராட்சிக்கு செல்ல இணைப்பு சாலை மற்றும் பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பாலவாடி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தனிநபர் குடிநீர் இணைப்பு பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.48 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டிலும், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து பாலவாடியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளதை பார்வையிட்டார்.

முருங்கை நாற்றுப்பண்ணை

பின்னர் பேடறஅள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், தளவாய் அள்ளி ஊராட்சியில் தேசிய கிராம சுய ஆட்சி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியையும், சோமனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.53 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் முருங்கை நாற்றுப்பண்ணை மற்றும் ரூ.53 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை நாற்றுப்பண்ணை ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

மேலும் இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி, பொறியாளர் மாலதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story