மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேச்சு


மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் பேச்சு
x

மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேச்சு

நாமக்கல்

மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளித்து செயலாற்ற வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.

கடன் திட்ட அறிக்கை வெளியீடு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் தயாரிக்கப்பட்ட ரூ.13,200 கோடிக்கான 2022-23-ம் ஆண்டின் கடன் திட்ட அறிக்கையை வங்கியாளர்கள் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார். திட்ட அறிக்கையின் முதல் பிரதியை இந்தியன் வங்கியின் திருப்பூர் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ், சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் குமரன், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் ரமேஷ் ஆகியோர் பெற்று கொண்டனர்.

ரூ.13,200 கோடி கடன் திட்டம்

பின்னர் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நபார்டு வங்கி தயாரித்த வளம்சார்ந்த கடன் திட்டத்தை கணக்கில் கொண்டு 2022-23-ம் ஆண்டிற்கு ரூ.13,200 கோடி அளவில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.10,200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது சென்ற ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.3,360 கோடி அதிகமாகும்.

வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.6,156 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.3,294 கோடியும், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் உள்ளிட்ட பிற முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.750 கோடியும், முன்னுரிமையற்ற கடன்களுக்காக ரூ.3 ஆயிரம் கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கல்விக்கடன்

மொத்த முன்னுரிமை கடன்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.8,157.32 கோடியாகவும், கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.1,646.25 கோடியாகவும், தமிழ்நாடு கிராம வங்கியின் பங்கு ரூ.386.20 கோடியாகவும், இதர சிறு வங்கிகளின் பங்கு ரூ.10.23 கோடியாகவும் உள்ளது. வங்கியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கின்படி குறித்த கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த வேண்டும்.

அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக வங்கிகள் அனைத்தும் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக்கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளித்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ் குமார் உள்பட வங்கி அலுவலர்கள், பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story