கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

-வருகிற செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்தும், தேசிய புணரமைப்பு திட்டத்தின்கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்விற்கு விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வடசென்னை, கோயமுத்தூர், சேலம், நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில், அம்பத்தூர், செங்கல்பட்டு, ஒசூர், ஈரோடு, திருச்சி, உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, குன்னூர், அரியலூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பூர், தருமபுரி, திண்டிவனம், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய ஏதேனும் ஒரு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தேர்வு மைய முகவரிக்கு 26.7.2022-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத்தலைவரின் முடிவே இறுதியானது.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story