பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவை கலெக்டர் ஆய்வு


பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவை கலெக்டர் ஆய்வு
x

ஆற்காட்டில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவை கலெக்டர் ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 661 மாணவ-மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆற்காடு வடக்கு மற்றும் தெற்கு தோப்புக்கான தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க தயார் நிலையில் இருந்த உணவை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அப்போது நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகரமன்ற உறுப்பினர் காமாட்சி பாக்கியராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


Next Story