மழைநீர் கால்வாய் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு


மழைநீர் கால்வாய் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
x

ஜோலார்பேட்டை நகராட்சி பகுயில் மழைநீர் கால்வாய் அமைப்பது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை நகராட்சி பகுயில் மழைநீர் கால்வாய் அமைப்பது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வுசெய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி ஜங்ஷன் பஸ் நிலையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என நகர மன்ற தலைவர் காவியா விக்டர், வார்டு கவுன்சிலர் ஏழுமலை ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன்பேரில்

அதன்பேரில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே கால்வாய் அமைப்பது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே மழைநீர் வடிகால்வாய் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.

எரிவாயு தகன மேடை

மேலும் ஜோலார்பேட்டை நகராட்சி வார்டு எண் 1 பொட்டிகாரன் பள்ளம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடியில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான நடைபெற்று வருகிறது. இப்பணி தற்போது 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதனையும் கலெக்டர் பார்வையிட்டு பணியை வருக்ற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி துணை கோட்ட பொறியாளர் சிந்து, நகரமன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகராட்சி பொறியாளர் கோபு, வார்டு கவுன்சிலர் கே.எஸ்.ஏழுமலை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story