ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

கொரடாச்சேரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்து போதிய அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தினார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்து போதிய அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தினார்.

கலெக்்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, சீட்டு வழங்கும் இடம், மருந்தகம், மகப்பேறு பகுதி, ஆய்வகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை பெற வந்திருந்த பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்து கொள்ளவும், பொதுமக்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் , தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்திருக்குமாறும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ரேஷன் கடை

தொடர்ந்து பெருந்தரக்குடி ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்கள் இருப்பு குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு குறித்தும் ஆய்வு செய்தார். மேலும ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரேசன் கடை அலுவலர்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தடையின்றி வழங்க அறிவுறுத்தினார்.


Related Tags :
Next Story