ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அங்கு பரிசோதனைக்கு வந்திருந்த கர்ப்பிணிகக்க ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய அவர் முறையாக பரிசோதனை செய்யப்படுகிறதா ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறதா கருவுற்ற முதல் மாதத்தில் இருந்து ஊட்டச்சத்து உணவு முறைகள் எடுத்துக் கொள்கிறார்களா என கேட்டறிந்தார். குழந்தை திருமணத்தை தவிர்க்கும் வகையில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அப்போது மருத்துவர், வட்டார சுகாதார மேற் பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story