திருவண்ணாமலை கிரிவலப்பாதையை மேம்படுத்த கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை கிரிவலப்பாதையை மேம்படுத்த கலெக்டர் ஆய்வு
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை மேம்படுத்துவதற்காக கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை மேம்படுத்துவதற்காக கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்திடவும், கிரிவலம் செல்லவும் தினமும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையை மேம்படுத்துவதற்காக கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி பக்தர்கள் இரவு தங்கும் விடுதிகளிலும், நெடுஞ்சாலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் இலவச பக்தர்கள் ஓய்வு அறைகளிலும், ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் கட்டிடங்களிலும், இந்து சமய அறநிலையத்துறையின் கோவிலுக்கு சொந்தமான சன்னியாசிகள் தங்கும் வளாகத்திலும் கூடுதல் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கோபுரம்

மேலும் விரைவில் போலீசார் மூலம் சாதுகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் கிரிவலப்பாதையில் வருவாய்த்துறையில் உள்ள அரசு நிலங்கள் ஏதேனும் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். கிரிவலப்பாதையில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யாதேவி, அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story