ஆதியூர் பெரிய ஏரியில் கலெக்டர் ஆய்வு
ஆதியூர் பெரிய ஏரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் அருகே ஆதியூர் பெரிய ஏரி கனமழையின் காரணமாக நிரம்பி உள்ளது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உபரி நீர் வெளியேறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், நீர்வரத்து கால்வாய்களை சரிசெய்து தண்ணீர் தங்குதடையின்றி செல்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆதிதிராவிடர் மணவர்கள் விடுதி அருகேஉள்ள அரசுக்கு சொந்தமான இடத்தையும், வனச்சரக அலுவலக வளாகத்தில் மாவட்ட நூலக கட்டிடம் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.