அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு நடத்தினார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு நடத்தினார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொற்கையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இ்ங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கல்லூரியில் உள்ள ஆய்வகம், நூலகம், விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கொற்கை கால்நடை பண்ணையினை பார்வையிட்ட அவர், அங்கு வளர்க்கப்படும் உம்பளச்சேரி வகை மாடுகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
மகளிர் உரிமைத்தொகை
தொடர்ந்து கொற்கை, கீழ கொற்கை ஆகிய இடங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களிடன் வீடுகளுக்கு நேரடியாக சென்று விவரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் ஹமீதுஅலி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காசி, தாசில்தார் காரல்மார்க்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.