முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
ஆரணி அருகே முதியோர் இல்லத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் போதிமரம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ப.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது முதியவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா?, தங்கும் வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்து தருகிறார்களா? என கேட்டு அறிந்தார்.
அதைத் தொடர்ந்து ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன், திலகவதி, சவிதா மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கள ஆய்வாளர்கள், அனைத்து அரசு துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story