சேலத்தில் ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
சேலத்தில் ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதையடுத்து கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளனவா? என பார்வையிட்டார். மேலும் பழமையான கல்லறைகளின் வரலாறுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கல்லறை தோட்டத்தை அழகுபடுத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் தேவாலய ஆயர் ஜவகர் வில்சன் ஆசீர் டேவிட், செயலாளர் ஹனிபால்டு, இணை செயலாளர் சிமியோன் செல்வசிங், பொருளாளர் அருள்ராஜ், பேரவை உறுப்பினர் தியாபி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.