பள்ளி மாணவிக்கு கலெக்டர் வளர்மதி பாராட்டு


பள்ளி மாணவிக்கு கலெக்டர் வளர்மதி பாராட்டு
x

பள்ளி மாணவியை கலெக்டர் வளர்மதி பாராட்டினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார் அப்போது அந்த வழியாக செல்லும்போது அகரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கலெக்டர் சென்றார்.

அங்கு மாணவ-மாணவிகளிடம் திருக்குறள், வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அதில் 4-ம் வகுப்பு மாணவி ராகவி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினார். இதையடுத்து மாணவியை கலெக்டர் வளர்மதி பாராட்டி புத்தகத்தில் தன் கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி ஆசிரியர், மாணவ மாணவிகளை அவர் பாராட்டினார்.


Next Story