நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றினார்


நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றினார்
x

நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றினார். இதையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

திருநெல்வேலி

நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றினார். இதையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சுதந்திர தின விழா

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காலை 9.10 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது போலீஸ் இசைக்குழு சார்பில் பேண்ட் வாத்தியத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் 75 பலூன்களை கலெக்டர் பறக்க விட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை சமூக பாதுகாப்பு திட்டம், ஆதிதிராவிடர் நலத்துைற, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 20 பேருக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர்கள் முருகன், மீராள்பானு, சந்திரமோகன், சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், காவுராஜன், சிவகுமார், தனசிங் சாலமன், ஜோசப், சவுந்தர்ராஜன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, போலீசார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி அலுவலர் வெட்டுமபெருமாள், நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாராட்டு சான்றிதழ்கள்

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கலெக்டர்கள் ரிஷப், சந்திரசேகர், தமிழரசி, தாசில்தார்கள் செலின் கலைச்செல்வி, பெமினாரேச்சல், செல்வன், ஆனந்த்பிரகாஷ், கனகராஜ், பகவதி பெருமாள், துணை தாசில்தார்கள், வருவாய்துறை அதிகாரிகள், உதவி பத்திரப்பதிவு துறை உதவித்தலைவர் கவிதாராணி, நில அளவைதுறை கோட்ட பராமரிப்பு ஆய்வாளர் சேதுராமன், நலப்பணிகள் இணை இயக்குனர் ஜான் பிரிட்டோ, நெல்லை மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், டாக்டர்கள் பாஸ்கர், எழில்ரம்யா, அனிதா ராஜ்குமார் ஜேம்ஸ், கந்தசாமி பிரபு, குல்சன் நிலோபர், சூர்யா, சுகன்யாதேவி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சொர்ணலதா, ஜஹாங்கீர் பாட்சா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ராஷப்னம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிருபா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் இளங்கோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஸ்டேட்டஸ் ஜான் போஸ்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிச்சையா, மங்கையர்கரசி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் செண்பக நந்தினி, வனவர்கள் அப்துல்ரகுமான், மோகன்தாஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

இதைத்தொடர்ந்து நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர் ஜெயேந்திர சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களின் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார், துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜ்குமார் அருளானந்தம், ஆசிரியர்கள் கணபதி சுப்பிரமணியன், ஜெயமேரி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.


Next Story