கண் தானம் செய்த கலெக்டர் விஷ்ணு


கண் தானம் செய்த கலெக்டர் விஷ்ணு
x

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கண் தானம் செய்தார்.

விழுப்புரம்

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண் மருத்துவ துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, கண்தானம் செய்த 62 குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் பாராட்டு சான்று மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும் கண்தான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

அப்போது, கலெக்டர் விஷ்ணு, தனது கண்களை தானம் செய்யும் வகையில், அதற்கான உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து, டீன் ரவிச்சந்திரன், கண் மருத்துவ துறை தலைவர் ராமலட்சுமி ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், கண் மருத்துவ துறை பேராசிரியர் சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story